தொழிற்கல்வி பயிக்கும் ஏழை மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். கலெக்டர் தகவல்
தொழிற்கல்வி பயிக்கும் ஏழை மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
வேலூர்
தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவர்கள் படிப்பை தொடர முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏழை குடும்பங்களை சேர்ந்த 200 மாணவ-மாணவிகளுக்கு படிக்கும் காலத்தில் ஏதாவது ஓராண்டில் ஒரு முறை ரூ.50 ஆயிரம் வழங்கப்படுகிறது. இந்த நிதியுதவி பெறும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் இருப்பிட சான்று பெற்றவராக இருத்தல் வேண்டும்.
மேலும் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ், குடும்ப தலைவரின் ஆண்டு வருமான சான்றிதழ், இருப்பிட சான்று உள்ளிட்டவைகள் வைத்திருக்க வேண்டும். வேலூர் மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதி உதவியில் இருந்து உதவித்தொகை பெற 10 விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன.
கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் மாணவர்கள் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் பயின்று வந்தாலும் உதவித்தொகை பெற தகுதி உடையவர்கள் ஆவர். மாணவர்கள் இதற்கான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் வேலை நாட்களில் அளிக்கலாம்.
இந்த தகவலை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story