ராமநவமியையொட்டி ஒசபுரம் வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை


ராமநவமியையொட்டி  ஒசபுரம் வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 10 April 2022 9:40 PM IST (Updated: 10 April 2022 9:40 PM IST)
t-max-icont-min-icon

ராமநவமியையொட்டி ஒசபுரம் வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை

ராயக்கோட்:
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே ஒசபுரம் கிராமத்தில் சீதா சமேத ஸ்ரீராமர் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் 32 அடி உயரம் கொண்ட ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று ராமநவமியையொட்டி அதிகாலை 4.30 மணியிலிருந்து 7 மணி வரை ஹோம், வேத மந்திரங்கள் முழங்க ஆஞ்சநேயருக்கு மலர் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
விழாவில் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியை சேர்ந்த ஸ்ரீ ஞானாம்பா பாகவதாரணி கலந்து கொண்டு சம்பூர்ண ராமாயணம் எனும் (ஹரிகதை) பக்தி சொற்பொழிவு நடந்தது. இவ்விழாவில் கெலமங்கலம் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு நீர்மோர், இனிப்பு நீர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Next Story