திருவலம் அருகே 4 கிலோ கஞ்சா பறிமுதல். ஒருவர் கைது


திருவலம் அருகே 4 கிலோ கஞ்சா பறிமுதல். ஒருவர் கைது
x
தினத்தந்தி 10 April 2022 9:44 PM IST (Updated: 10 April 2022 9:44 PM IST)
t-max-icont-min-icon

திருவலம் அருகே 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

திருவலம்

வேலூர் மாவட்டம், காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன், திருவலம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முத்து செல்வன் மற்றும் போலீசார் சேர்க்காடு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மதுரை, திருப்பரங்குன்றம், பாம்பன் நகர் பகுதியைச் சேர்ந்த பழனி (42) என்பவர் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்டுள்ளார். 

இதனையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரித்த போது அவர் 4 கிலோ கஞ்சா வைத்து இருப்பது தெரியவந்தது. போலீசார் அதனை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து திருவலம் போலீசார் பழனியை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story