குருத்தோலையுடன் ஊர்வலம்


குருத்தோலையுடன் ஊர்வலம்
x
தினத்தந்தி 10 April 2022 10:22 PM IST (Updated: 10 April 2022 10:22 PM IST)
t-max-icont-min-icon

குருத்தோலையுடன் ஊர்வலம் நடந்தது.

பரமக்குடி, 
பரமக்குடி அருகே உலகநாதபுரத்தில் உள்ள குழந்தை இயேசு ஆலயத்தில் குருத்தோலைஞாயிறுயையொட்டி சிறப்பு திருப்பலி நடந்தது. பின்பு அருட்சான்று நிலையத்தில் இருந்து பங்கு மக்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். அருள்பணி டென்சிங் சிறப்பு மரையுரையாற்றினார். பங்குத்தந்தை சிங்கராயர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.  கீழக்கரையில் புனித அந்தோணியார் ஆலயத்தில் இருந்து கீழக்கரை பங்குத்தந்தை ரெமிஜியஸ் தலைமையில், சிலுவையை சுமந்தபடி ஆண்கள் மற்றும் பெண்கள் உள்பட ஏராளமான கிறிஸ்தவர்கள் கீழக்கரை கடற்கரையில் உள்ள புனிதர்கள் கெபியை நோக்கி தவப்பயணம் சென்றனர்.அங்கு சிறப்பு திருப்பலி நிறைவேற்றினர். திருவாடானை தாலுகாவில் குருத்தோலை ஞாயிறு தினம் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி தொண்டி தூய சிந்தாத்திரை மாதா ஆலயம், காரங்காடு புதுமை புகழ் செங்கோல் மாதா ஆலயம், சீ.கே. மங்கலம் புனித பேதுரு ஆலயம், ஓரிக்கோட்டை தூய ஜெபமாலை அன்னை ஆலயம், ஓரியூர் புனித அருளானந்தர் ஆலயம் ஆண்டாவூரணி தூய இரக்கநாயகி அன்னை ஆலயம் உள்ளிட்ட திருவாடானை, தொண்டி பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் குருத்தோலை பவனி நடைபெற்றது. 

Next Story