மாணவியை திருமணம் செய்த வாலிபர் உள்பட 9 பேர் மீது வழக்கு
மாணவியை திருமணம் செய்த வாலிபர் உள்பட 9 பேர் மீது வழக்கு
அரூர்:
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி அரசு பள்ளியில் பிளஸ்- 1 படித்து வந்தார். இவரை கோடிகவுண்டனூரை சேர்ந்த பூவரசன் (வயது 28) என்பவர் காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று குண்டல்மடுவு பெருமாள் கோவிலில் திருமணம் செய்துள்ளார். பின்னர் தர்மபுரியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்ததுடன், மாணவிக்கு மிரட்டல் விடுத்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் 5 மாத ஆண் குழந்தையுடன் மாணவி அரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்ததாக பூவரசன், கடத்தல் மற்றும் திருமணத்திற்கு உதவியதாக அவரது தந்தை ராமமூர்த்தி (55), தாய் ராஜேஸ்வரி (49), உறவினர்கள் ராஜா (45), முருகன் (28), மருதவேல் (50), சென்னப்பன் (52), யசோதா (65), மாங்கனி (48) ஆகிய 9 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story