தர்மபுரி பகுதியில், ராமநவமியையொட்டி ராமர்- சீதா திருக்கல்யாண உற்சவம் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
தர்மபுரி பகுதியில், ராமநவமியையொட்டி ராமர்- சீதா திருக்கல்யாண உற்சவம் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
தர்மபுரி:
தர்மபுரி பகுதியில் உள்ள கோவில்களில் ராமநவமியையொட்டி ராமர்- சீதா திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீராமநவமி விழா
தர்மபுரி எஸ்.வி. ரோடு ஸ்ரீ அபய ஆஞ்சநேயர் கோவிலில் ஸ்ரீ ராமநவமி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் கோவில் முன்பு உள்ள திருமண மண்டபத்தில் ராமர்- சீதா திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. விழாவில் சீர்வரிசைகளுடன் சாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு மகா தீபாராதனையும் உபகார பூஜைகள் நடந்தது.
விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு சிறப்பு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாலை ராமர் திருக்கல்யாண திருவீதி உலா நடைபெற்றது. மேளதாளங்கள் முழங்க நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் விமலா, அர்ச்சகர்கள் வாசுதேவன், பாலாஜி மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
வெங்கடம்பட்டி
இதேபோன்று தர்மபுரி அருகே வெங்கடம்பட்டியில் ஸ்ரீ பட்டாபி ராமர் கோவிலில் ஸ்ரீராம நவமி விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி சாமிக்கு ஜனன ஹோமம், சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடந்தது. பின்னர் கோவில் வளாகத்தில் ராமர்- சீதா திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு சிறப்பு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை காண்ட்லா சமூகத்தினர் மற்றும் விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.
இதேபோன்று தர்மபுரி சீதாராம தாச ஆஞ்சநேயர் கோவிலில் ஸ்ரீராமநவமி விழாவையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் ஸ்ரீராமர்- சீதா திருக்கல்யாண உற்சவமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இந்த விழாவிலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தர்மபுரி எஸ்.வி.ரோடு பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில் உள்ளிட்ட கோயில்களிலும் ஸ்ரீராமநவமி விழா திருக்கல்யாண உற்சவம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
Related Tags :
Next Story