பணிசெய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு


பணிசெய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு
x

அதிகாரி வாகன தணிக்கை செய்தபோது பணிசெய்ய விடாமல் தடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி பகுதியில் விருதுநகர் சரக மோட்டார் வாகன ஆய்வாளர் பூர்ணலதா வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக செம்மண் ஏற்றி வந்த வாகனத்தை நிறுத்தி எடைபோட கூறியபோது தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரி பூர்ணலதா 2 பேர் மீது திருப்புல்லாணி போலீசில் புகார் செய்தார். போலீசார் அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story