மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்
சின்னசேலத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.
சின்னசேலம்,
சின்னசேலம் வட்டார வள மையம் சார்பில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் கீழ் 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் சின்னசேலத்தில் நடைபெற்றது.
இதற்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட உதவி திட்ட அலுவலர் பழனியாப்பிள்ளை, வட்டார கல்வி அலுவலர் தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் பயிற்றுனர் ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் வரவேற்றார். சின்னசேலம் ஒன்றியக்குழு துணைத் தலைவர் அன்புமணிமாறன் பேரூராட்சி மன்ற தலைவர் லாவண்யாஜெய்கணேஷ் ஆகியோர் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனர்.
முகாமில் மனநல மருத்துவர் வேல் இசைக்கோ, கண் மருத்துவர் காயத்ரி, காது மூக்கு தொண்டை மருத்துவர் வாசவி, உடலியக்க மருத்துவர் மோகன்ராஜ், குழந்தைகள் நல மருத்துவர் சிவலிங்கம் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு மதிப்பீடு செய்து தேசிய அடையாள அட்டை வழங்கினர்.
மேலும் உபகரணங்கள் பெறவும், அறுவை சிகிச்சை செய்யவும் பரிந்துரை செய்தனர். இதில் பேரூராட்சி கவுன்சிலர் அரசு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராஜா, ராமதாஸ், தலைமை ஆசிரியர்கள் நடராஜன், ஆரோக்கிய மேரி, ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் சிறப்பு பயிற்றுனர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் பயிற்றுனர் வரதராஜன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story