திருப்பூர் கட்டிட பொறியாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா


திருப்பூர் கட்டிட பொறியாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு  விழா
x
தினத்தந்தி 10 April 2022 10:45 PM IST (Updated: 10 April 2022 10:45 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் கட்டிட பொறியாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

அனுப்பர்பாளையம்:
திருப்பூர் கட்டிட பொறியாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு  விழா நடைபெற்றது. 
புதிய நிர்வாகிகள் 
திருப்பூர் கட்டட பொறியாளர்கள் சங்கத்தின் 2022-2023 புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா திருப்பூர் தாராபுரம் ரோடு வித்யாகார்த்திக் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு தலைவர் முரளி தலைமை தாங்கினார். செயலாளர் ஜனார்த்தனன் வரவேற்றார். பட்டய தலைவர் சிதம்பரம், முன்னாள் தலைவர்கள் கலைச்செல்வன், ரமேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாநில தலைவர்கள் ராகவன், தில்லைராஜன், பொருளாளர் பொன்னுசாமி, மண்டல தலைவர் சண்முக இளங்கோவன், மாநில இணை பொருளாளர் மோகன கண்ணன், திருப்பூர் சங்க முன்னாள் தலைவர்கள் சண்முகராஜ், ரத்தினசபாபதி திருப்பூர் பி.ஏ.ஐ. தலைவர் நாகராஜன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். 
அனைத்து பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உடனடி முன்னாள் தலைவர் சரவணன், மாநில தலைவர் ரவி, மாநில முதல் துணைத் தலைவர் ராஜேஷ் ஆகியோர் புதிய நிர்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தனர். திருப்பூர் கட்டட பொறியாளர்கள் சங்கத்தின் 2022-2023 புதிய நிர்வாகிகளாக தலைவர் ஸ்டாலின்பாரதி, செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் பாரதிராஜா, துணைத்தலைவர் பழனிசாமி, உடனடி முன்னாள் தலைவர் முரளி, துணை செயலாளர் பிரகாஷ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 22 பேர் பதவியேற்றுக் கொண்டனர். தலைவராக பொறுப்பேற்ற ஸ்டாலின்பாரதி ஏற்புரை ஆற்றினார்.
விலை உயர்வு
 விழாவில் மாநில தலைவர் ரவி பேசும்போது, கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுமானத் துறையில் உள்ள பிரச்சினைகளை அரசிடம் கொண்டு செல்லும் வகையில் அகில இந்திய அளவில் இன்ஜினீயரிங் கவுன்சில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றார். 
சென்னை கார்த்திகேயன் அசோசியேட்ஸ் கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நவீன முறையிலும், சரியான பொருளாதாரத்திலும் கட்டிடங்களை கட்டுவது தொடர்பாக பேசினார். விழாவில் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மைய இயக்குனர், சூழலியலாளர் கோவை சதாசிவம், வனத்துக்குள் திருப்பூர் இயக்குனர் குமார் துரைசாமி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். விழாவையொட்டி கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முடிவில் செயலாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார். இதில் மாநில, திருப்பூர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Next Story