ஓசூரில் அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
ஓசூரில் அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
ஓசூர்:
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.ம.மு.க. சார்பில் தமிழகத்தில் சொத்து வரி உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்தும், அதனை திரும்பப்பெற வலியுறுத்தியும் நேற்று ஓசூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓசூர் ராம் நகர் அண்ணா சிலையருகில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மாரே கவுடு தலைமை தாங்கினார். நகர செயலாளர் வீரய்யா, மாவட்ட அவைத்தலைவர் அன்வர் பாஷா, பொதுக்குழு உறுப்பினர் வெள்ளதுரை, மாவட்ட பொருளாளர் சிவகுமார் மற்றும் சாய்கிரண், லோகேசன், துரைராஜ், அரப்ஜான் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Related Tags :
Next Story