வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்


வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 10 April 2022 10:49 PM IST (Updated: 10 April 2022 10:49 PM IST)
t-max-icont-min-icon

வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கிருஷ்ணகிரி:
ராயக்கோட்டை அருகே கொப்பகரை பக்கமுள்ள சிங்காரப்பேட்டையை சேர்ந்தவர் திருப்பதி என்கிற சேட்டு (வயது 30). இவருடைய வீட்டில் கர்நாடக மாநிலத்தில் விற்பனை செய்வதற்காக ரேஷன் அரிசி கடத்தி பதுக்கி வைத்துள்ளதாக கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான போலீசார் அவரது வீட்டிற்கு நேற்று சென்றனர். போலீசார் வருவதை அறிந்த திருப்பதி அங்கிருந்து தப்பி ஓடினார். அவரது வீட்டை போலீசார் சோதனை செய்த போது ஒரு அறையில் 50 கிலோ எடை கொண்ட 24 மூட்டைகளில் மொத்தம் 1¼ டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதை குறைந்த விலைக்கு வாங்கி, கர்நாடக மாநிலத்திற்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. இந்த அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதை கடத்தி வைத்திருந்ததாக திருப்பதி என்கிற சேட்டுவை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Next Story