ரூபாய் நோட்டு அலங்காரத்தில் அருள்பாலித்த மாரியம்மன்
ரூபாய் நோட்டு அலங்காரத்தில் அருள்பாலித்த மாரியம்மன்
திருப்பூர்:
திருப்பூர் கோர்ட்டு வீதியில் உள்ள போலீஸ் லைன் மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு பொங்கல் திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி அம்மனுக்கு ஒவ்வொரு நாளும் பல்வேறு வகை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வருகின்றது. அந்தவகையில் நேற்று அம்மனுக்கு ஏராளமான ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வந்து தரிசனம் செய்தனர். விழாவின் தொடர்ச்சியாக நொய்யல் ஆறு கருப்பண்ண விநாயகர் கோவிலில் இருந்து அம்மன் கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சி இன்று (திங்கட்கிழமை) இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதேபோல் நாளை இரவு 8 மணிக்கு அம்மன் அழைத்தல், வருகிற 13-ந் தேதி காலை பொங்கல் மாவிளக்கு, இரவு ஆர்கெஸ்ட்ரா, 14-ந்தேதி இரவு 7 மணிக்கு கண்ணாடி பல்லக்கில் அம்மன் திருவீதி உலா, 15-ந் தேதி மகா அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடக்கிறது. 17-ந் தேதி மறு பூஜையுடன் விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக குழு தலைவர் சிவசுப்பிரமணியன், செயலாளர் ஸ்ரீராம், துணைச்செயலாளர் வரதராஜன், பொருளாளர் ராம்குமார் பாலாஜி மற்றும் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story