போதை பவுடர் கடத்தல் வழக்கில் மேலும் ஒருவர் கைது


போதை பவுடர் கடத்தல் வழக்கில் மேலும் ஒருவர் கைது
x
தினத்தந்தி 10 April 2022 11:04 PM IST (Updated: 10 April 2022 11:04 PM IST)
t-max-icont-min-icon

போதை பவுடர் கடத்தல் வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ராமேசுவரம், 
ராமேசுவரம் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1 கோடி மதிப்புள்ள ஒரு கிலோ போதை பவுடரை  குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்து பாம்பன் மற்றும் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த பிரைட்வின், தஷ்மன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். இந்த நிலையில் இதுதொடர்பாக அருள் விக்னேஸ்வரன் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய தலைமறைவான ராமேசுவரம் பெரிய பள்ளிவாசல் தெரு பகுதியை சேர்ந்த சேது பாண்டி மற்றும் பத்திரகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சேதுபதி ஆகிய 2 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story