பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ7 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை
பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ7 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை
முத்தூர்
பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ.7 லட்சத்திற்கு மாடுகள் விற்பனை செய்யப்பட்டது.
பழையகோட்டை
நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை மாட்டுத்தாவணியில் உலகிலேயே வீரத்திற்கும், கம்பீரத்திற்கும் புகழ் பெற்ற காங்கயம் இன காளைகள், கன்றுகள், பசுமாடுகள் விற்பனை சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது.
அதன்படி நேற்று நடைபெற்ற சந்தையில் திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், கோவை, திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த காங்கயம் இன காளைகள் வளர்ப்போர், நாட்டு மாடுகளை வளர்க்கும் விவசாயிகள், காங்கயம் இன காளை பராமரிப்பு விருத்தியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். சந்தையில் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்த பெரிய பூச்சி காளைகள், இளம் பூச்சி காளைகள், செவலை பசுமாடுகள், மயிலை பூச்சி காளைகள், மயிலை பசுமாடுகள், மயிலை கிடாரிகள், காராம்பசு கிடாரி கன்றுகள் என ரகம் வாரியாக தரம் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
ரூ.7 லட்சத்திற்கு விற்பனை
இந்த சந்தையில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட மொத்தம் 30 காங்கயம் இன காளைகள், பசுமாடுகளில் மொத்தம் 18 மாடுகள் ரூ.7 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளகோவில் அருகே உள்ள கண்ணபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு கடந்த 10 நாட்களாக மாட்டுச் சந்தை நடைபெற்று வருகிறது. இதனால் பழையகோட்டை மாட்டுத்தாவணி காங்கயம் இன கால்நடை சந்தைக்கு கடந்த இரண்டு வார காலமாக மாடுகள் வரத்து குறைவாக உள்ளது. இருப்பினும் கண்ணபுரம் மாட்டுச்சந்தையில் காங்கயம் இன இளங்கன்றுகள் வாங்க வந்த விவசாயிகள் வியாபாரிகள் ஒரு சிலர் நேற்று பழையகோட்டை மாட்டுத்தாவணி வந்து காங்கயம் இன பசமாடுகள், கன்றுகளை வாங்கி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story