மதுவில் விஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை
மதுவில் விஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
ஆலங்குடி:
ஆலங்குடி அருகே கொத்தக்கோட்டை வம்பன் நால் ரோட்டை சேர்ந்தவர் முருகேசன் (வயது 42). விவசாயியான இவர், தினமும் மதுகுடித்து விட்டு வீட்டிற்கு வருவது வாடிக்கையாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 6-ந் தேதி வீட்டின் அருகே மதுபாட்டிலில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த முருகேசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story