சத்துணவு ஊழியர்கள் சங்க கூட்டம்
சத்துணவு ஊழியர்கள் சங்க கூட்டம் நடந்தது.
எலச்சிபாளையம்:
தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் எலச்சிபாளையத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் தங்கராஜூ தலைமை தாங்கினார். இதில் காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து ஒன்றிய ஆணையாளரை சந்தித்து மனு அளிப்பது என்றும், அந்த மனுவின் நகல்களை முதல்-அமைச்சருக்கு அனுப்பி வைப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் நடேசன், மாநில செயற்குழு உறுப்பினர் கோமதி, மாவட்ட இணை செயலாளர் பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் பொருளாளர் சாந்தி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story