நாமக்கல் தாசில்தார் அலுவலகத்தில் குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளுக்கு விண்ணப்பிக்க சிறப்பு முகாம்-நாளை தொடங்குகிறது
நாமக்கல் தாசில்தார் அலுவலகத்தில் குடிசைமாற்று வாரிய குடியிருப்புகளுக்கு விண்ணப்பிக்க சிறப்பு முகாம் நாளை தொடங்குகிறது
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் நகராட்சியில் நிலவங்கி திட்டப்பகுதி-3, நிலவங்கி திட்டப்பகுதி-4 மற்றும் எருமப்பட்டி பேரூராட்சியில் நாகராஜபுரம் திட்ட பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் (குடிசைமாற்று வாரியம்) அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் முறையே 960, 192 மற்றும் 240 என மொத்தம் 1,392 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு பயனாளிகள் தேர்வு செய்ய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.
விண்ணப்பிக்க விரும்புவோர் நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (புதன்கிழமை) ஆகிய 2 நாட்கள் நாமக்கல் தாசில்தார் அலுவலக வளாகத்தில் நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் குடும்ப தலைவர் மற்றும் உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல், வாக்காளர் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் குடும்ப புகைப்படம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். பயனாளியின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். மேலும் பயனாளி மற்றும் பயனாளியின் குடும்பத்தினருக்கு சொந்த வீடோ, நிலமோ இருக்கக்கூடாது. பயனாளி நகரப்பகுதியில் வாடகை வீட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story