விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை
அருப்புக்கோட்டை அருகே விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டி வேல்முருகன் காலனியை சேர்ந்தவர் ஆவுடையம்மாள் (வயது70). இவருடைய பேரன் செல்லப்பாண்டி (23). ஆவுடையம்மாள், செல்லப்பாண்டியுடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் ஆவுடையம்மாள் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர் திடீரென அரளி விதையை அரைத்துக்குடித்ததாக கூறப்படுகிறது. உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து செல்லப்பாண்டி டவுன் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story