தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
துர்நாற்றம் வீசும் உழவர்சந்தை
தர்மபுரி உழவர் சந்தைக்கு தினமும் விவசாயிகள், பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். இந்த உழவர் சந்தைக்கு கொண்டு வரப்படும் காய்கறிகள், பழங்கள் அழுகி போனால் அதனை முறையாக அப்புறப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவது இல்லை. நிர்வாக அலுவலகம் அருகில் சந்தையில் அழுகிப்போன காய்கறிகள், பழங்களை கொட்டி வைத்திருக்கிறார்கள். அவ்வப்போது இதனை அப்புறப்படுத்தாததால் அங்கு துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே அழுகிப்போன காய்கறிகள், பழங்களை உடனே அப்புறப்படுத்தி உழவர் சந்தையை தூய்மையாக வைத்துக்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், தர்மபுரி.
அறிவிக்கப்படாத மின்தடை
கிருஷ்ணகிரி நகரம் முழுவதும் கடந்த சில நாட்களாக அறிவிக்கப்படாத மின்தடை காணப்படுகிறது. காலையில் 2 மணி நேரமும், பிற்பகல் மற்றும் இரவு நேரங்களில் 2 மணி நேரமும் மின்தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள் கடும் சிரமப்படுகிறார்கள். எனேவ மின்வாரிய அதிகாரிகள் சீராக மின்சாரம் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமார், கிருஷ்ணகிரி.
சுகாதார சீர்கேடு
சேலம் 41-வது வார்டு சத்தியமூர்த்தி தெருவில் சாக்கடை கால்வாய் பல மாதங்களாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால் சாக்கடையில் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுத்தொல்லையும் அதிகரித்துவிட்டது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த தெருவில் ஒரு வாரத்திற்கும் மேலாக வீடுகளில் குப்பைகளை வாங்காததால் தெருவில் ஆங்காங்கே குப்பைகள் குவிந்து கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாக்கடை கால்வாயை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், 41-வது வார்டு சேலம்.
சேலம் 2-வது வார்டு ராசிநகர் பகுதியில் மாதக்கணக்கில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் கொசு தொல்லையும் அதிகமாக உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும்.
-ராதாகிருஷ்ணன், ராசிநகர், சேலம்.
வேகத்தடைகள் அவசியம்
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரண்டபள்ளி தேசிய நெடுஞ்சாலையை கடக் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் மிகவும் அச்சப்படுகிறார்கள். சில நேரங்களில் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். பொதுமக்களின் நலன் கருதி அந்த பகுதியில் இருபுறமும் சாலையில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும்.
-ஊர்மக்கள், பேரண்டபள்ளி, கிருஷ்ணகிரி.
Related Tags :
Next Story