நீர்வரத்து குறைந்ததால் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி


நீர்வரத்து குறைந்ததால் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
x
தினத்தந்தி 11 April 2022 1:40 AM IST (Updated: 11 April 2022 1:40 AM IST)
t-max-icont-min-icon

நீர்வரத்து குறைந்ததால் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

அம்பை:
நீர்வரத்து குறைந்ததால் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

மணிமுத்தாறு அருவி
நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் மணிமுத்தாறு அருவியும் ஒன்றாகும். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள இந்த அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும். இதில் குளிப்பதற்காக நெல்லை மாவட்டத்தில் இருந்து மட்டும் இல்லாமல் பிற மாவட்டங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். 
கொரோனா தளர்வுகளுக்கு பின்னர் வனத்துறையினர் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சுற்றுலா பயணிகளை மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி அளித்து வருகின்றனர்.

குளிக்க அனுமதி
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையான மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் இருந்தது. நேற்று முன்தினம் அருவிக்கு அதிக அளவில் நீர்வரத்து இருந்தது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
நேற்று மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து சற்று குறைந்தது. இதையடுத்து அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். இருந்தபோதிலும் கூட்டம் குறைவாகவே இருந்தது.

Next Story