பஞ்சாயத்து தலைவியை தாக்கிய 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
ஆலங்குளம் அருகே பஞ்சாயத்து தலைவியை தாக்கிய 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே ஊத்துமலையைச் சேர்ந்த நிறைகுளத்தான் என்ற குமாருக்கும் (வயது 37), அப்பகுதியைச் சேர்ந்த அய்யனாருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. கடந்த மாதம் அங்குள்ள கோவில் விழாவின்போது, நிறைகுளத்தான் தன்னுடைய நண்பர்களுடன் மது அருந்தி விட்டு, அய்யனாரின் வீட்டுக்கு சென்றார். பின்னர் அய்யனாரையும், அவருடைய மனைவியும், ஊத்துமலை பஞ்சாயத்து தலைவியுமான வளர்மதி உள்ளிட்ட 5 பேரை நிறைகுளத்தான் நண்பர்களுடன் சேர்ந்து தாக்கினார்.
இதுகுறித்து ஊத்துமலை போலீசார் தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நிறைகுளத்தான், அவருடைய நண்பரான வசந்த் (24) உள்ளிட்ட 6 பேரை கைது செய்து, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் நிறைகுளத்தான், வசந்த் ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கு தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரணடு கிருஷ்ணராஜ், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதனை ஏற்று நிறைகுளத்தான், வசந்த் ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கு கலெக்டர் கோபால சுந்தரராஜ் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு கடிதத்தை பாளையங்கோட்டை மத்திய சிறையில் போலீசார் வழங்கினர்.
Related Tags :
Next Story