குருத்தோலை ஞாயிறு பவனி


குருத்தோலை ஞாயிறு பவனி
x
தினத்தந்தி 11 April 2022 2:04 AM IST (Updated: 11 April 2022 2:04 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது.

ஆலங்குளம்:
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குருத்தோலை ஞாயிறு பவனி நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

குருத்தோலை ஞாயிறு
ஆலங்குளம் பகுதியில் கிறிஸ்தவர்களின் குருத்தோலை ஞாயிறு பவனி நேற்று நடந்தது. இதையொட்டி ஆலங்குளம், நல்லூர், அடைக்கல பட்டணம், ஊத்துமலை பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்கள் குருத்தோலைகளால் அலங்கரிக்கப்பட்டது. திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு குருத்தோலைகளால் செய்யப்பட்ட சிலுவைகளை கையில் ஏந்திய படி ஓசன்னா பாடல் பாடி வீதிகள் வழியாக சென்றனர்.

பாவூர்சத்திரம்- சிவகிரி
கிறிஸ்தவர்களின் குருத்தோலை ஞாயிறையொட்டி பாவூர்சத்திரம் சி.எஸ்.ஐ. மற்றும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் இணைந்து ஆலயங்களில் இருந்து குருத்தோலைகளை கைகளில் ஏந்திய வண்ணம் பாடல்கள் பாடி முக்கிய வீதிகளில் பவனியாக சென்றனர். ஏற்பாடுகளை பாவூர்சத்திரம் கிறிஸ்து ஆலய சேகர குரு டேனியல் தனசன், புனித அந்தோனியார் ஆலய பங்கு தந்தை ஜேம்ஸ் அடிகளார் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
சிவகிரி, ராயகிரி, வாசுதேவநல்லூர் பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது. இதையொட்டி சிவகிரி லூர்து அன்னை ஆலயம், வாசுதேவநல்லூர் புனித சூசையப்பர் ஆலயம், உள்ளார் ஆரோக்கிய அன்னை மேரி ஆலயம், சண்முகநாதபுரம் புனித சவேரியார் ஆலயம், சரவணாபுரம் புனித அந்தோணியார் ஆலயம், ராமநாதபுரம் புனித சகாயமேரி ஆலயம், நாரணபுரம் புனித லூர்து மாதா ஆலயம், சங்கனாப்பேரி புனித இன்னாசியார் ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களில் சிறப்பு திருப்பலி, பிரார்த்தனைகள் நடைபெற்றது.
தேவிபட்டணம் குழந்தை திரேசா ஆலயத்தில் பங்குத்தந்தை அருள் அலெக்சாண்டர் சிறப்பு திருப்பலி நடத்தினார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story