ஒப்பந்ததாரரிடம் நூதன முறையில் ரூ.60 ஆயிரம் மோசடி


ஒப்பந்ததாரரிடம் நூதன முறையில் ரூ.60 ஆயிரம் மோசடி
x
தினத்தந்தி 11 April 2022 2:14 AM IST (Updated: 11 April 2022 2:14 AM IST)
t-max-icont-min-icon

மதுரையை சேர்ந்த ஒப்பந்ததாரரிடம் ரூ.60 ஆயிரம் மோசடி செய்யப்பட்டது.

மதுரை,

அலங்காநல்லூர் கோவில்பாப்பாகுடியை சேர்ந்தவர் சேதுராமன் (வயது 48). ஒப்பந்ததாரர். இவரிடம் பலர் வேலை பார்த்து வருகின்றனர். இவர் விளாங்குடியில் உள்ள அரசு வங்கி கிளையில் கணக்கு வைத்துள்ளார்.வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு அவர் செயலி மூலம் தனது வங்கி கணக்கில் இருந்து பணம் அனுப்பி வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று தொழிலாளர்களுக்கு பணம் அனுப்ப முயற்சி செய்தபோது செயலி வேலை செய்யவில்லை. அவர் முயற்சி செய்த சிறிது நேரத்தில் அவருக்கு செல்போன் அழைப்பு வந்தது. அதில் செயலி வேலை செய்யவில்லை என்று கூறி வங்கி விவரங்களை கேட்டு உள்ளனர். அவர்களுக்கு வங்கி கணக்கு விவரங்களை அவர் தெரிவித்துள்ளார். அடுத்த சில நிமிடங்களிலேயே அவரது செல்போனுக்கு 2 குறுஞ்செய்தி வந்தது. அதில் முதல் குறுஞ்செய்தியில் 24,998 ரூபாயும், 2-வது குறுஞ்செய்தியில் 35,001 ரூபாயும் எடுத்ததாக தகவல் வந்தது.பின்னர் அந்த எண்ணுக்கு அவர் தொடர்பு கொண்டபோது தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது. அப்போது தான் அவர் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.இது குறித்து சேதுராமன் உடனே மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடி ஆசாமிகளை தேடி வருகின்றனர்.



Next Story