துமகூருவில் 161 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை; பசவராஜ் பொம்மை திறந்து வைத்தார்


துமகூருவில் 161 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை; பசவராஜ் பொம்மை திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 11 April 2022 3:48 AM IST (Updated: 11 April 2022 3:48 AM IST)
t-max-icont-min-icon

துமகூருவில் 161 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலையை பசவராஜ் பொம்மை திறந்து வைத்தார்.

பெங்களூரு:

துமகூரு மாவட்டம் குனிகல் நகரில் பித்தனகெரே பசவவேஸ்வரா மடம் உள்ளது. அந்த மடத்தில் 161 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு, பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலையை திறந்து வைத்தார்.

  அவர் பேசுகையில், "ராம நவமியை முன்னிட்டு இந்த மடம் பல்வேறு புனிதமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. வரும் நாட்களில் இந்த பகுதியில் பெரிய அளவில் வளர்ச்சி பணிகள் நடைபெறும். ராமாயணத்தில் பஞ்சமுகி ஆஞ்சனேயாவுக்கு சிறப்பு இடம் உள்ளது. ஹனுமான் உலகின் உலனுக்காக அவதாரம் எடுத்தார். ஆஞ்சனேயாவுக்கு 161 அடி உயர சிலை நிறுவப்பட்டது என்பது கடவுளின் விருப்பம். இந்த சிலையை செதுக்கிய சிற்பிகள் சிறப்பான பணியை செய்துள்ளனர்" என்றார்.
  இதில் மடாதிபதிகள் நஞ்சாவதூத சுவாமி, வசனானந்த சுவாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story