விபத்தில் சிக்கிய தொழிலாளி சாவு
விபத்தில் சிக்கிய தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
திருச்சி:
திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 31). சுமைதூக்கும் தொழிலாளியான இவர் கடந்த 8-ந் தேதி இரவு எடமலைப்பட்டிபுதூர் ராமச்சந்திரா நகரில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த கார் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சுரேஷை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி சுரேஷ் நேற்று இரவு இறந்தார். இந்த சம்பவம் குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வுபிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story