மராட்டிய சட்டசபையில் 104 எம்.எல்.ஏ.க்கள் விவசாயிகள்
மராட்டியத்தில் 104 எம்.எல்.ஏ.க்கள் விவசாயிகள் என்பது தெரிய வந்து உள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் 104 எம்.எல்.ஏ.க்கள் விவசாயிகள் என்பது தெரிய வந்து உள்ளது.
104 எம்.எல்.ஏ. விவசாயிகள்
மராட்டிய சட்டசபை தேர்தல் 2019-ம் ஆண்டு அக்டோபரில் நடந்தது. இந்தநிலையில் சமீபத்தில் மாநில தலைமை செயலகம் எம்.எல்.ஏ.க்களின் கல்வி தகுதி, வயது, தொழில் உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டுள்ளது.
இந்த தகவலின்படி மாநிலத்தில் உள்ள 288 எம்.எல்.ஏ.க்களில் 104 பேர் (3 பெண்கள்) விவசாயிகள். 97 பேர் (6 பேர் பெண்கள்) தொழில், வியாபாரம் செய்கின்றனர். 50 பேர் சமூக சேவகா்களாகவும், 12 பேர் கட்டுமான அதிபர்களாகவும், 7 பேர் டாக்டர்களாகவும், 3 பேர் வக்கீல்களாகவும் உள்ளனர். 6 பேர் அரசு பணியாளர்களாக இருந்து உள்ளனர்.
மராட்டிய சட்டசபையில் நகர்புற, கிராமப்புற தலைவர்கள் சம அளவில் இருப்பதாக பொதுப்பணித்துறை மந்திரி அசோக் சவான் கூறினார். மேலும் பல எம்.எல்.ஏ.க்கள் விவசாயிகளாக இருப்பது வேளாண் சார்ந்த சட்டம், கொள்கைகளை உருவாக்க பயன் உள்ளதாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
4 இளம் எம்.எல்.ஏ.க்கள்
இதேபோல மராட்டிய சட்டசபையில் 26 முதல் 30 வயது வரை 4 இளம் எம்.எல்.ஏ.க்களும், 71 முதல் 75 வயது வரை 3 பேரும் மூத்த எம்.எல்.ஏ.க்களாக உள்ளனர். 155 எம்.எல்.ஏ.க்கள் 46 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். இதேபோல எம்.எல்.ஏ.க்களில் 6 முனைவர் பட்டம் பெற்றவர்கள், 83 பட்டதாரிகள், 7 மருத்துவ படிப்பு முடித்தவர்கள், 15 பொறியியல் பட்டதாரிகள், 20 சட்ட படிப்பு முடித்தவர்கள், 21 டிப்ளமோ படித்தவர்கள் உள்ளனர்.
இதேபோல பி.எட்., பொறியில் முதுகலை, தொழில் மேலாண்மை, மருத்துவ மேல் படிப்பு, சட்டத்தில் முதுகலை முடித்த எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.
Related Tags :
Next Story