கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 April 2022 5:50 PM IST (Updated: 11 April 2022 5:50 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவில்பட்டி:
கோவில்பட்டி ரெயில் நிலையம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக் கான சங்கம் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், மாற்றுத் திறனாளிகள் வாகனங்களுக்கு மானிய விலையில் பெட்ரோல் வழங்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நகரச் செயலாளர் சக்கரையப்பன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் முத்துக் காந்தாரி, மாவட்ட துணைச் செயலாளர் சாலமன் ராஜ், ஒன்றிய தலைவர் முத்து மாலை, ஒன்றிய செயலாளர் கண்ணன், நகர தலைவர் அந்தோணி மற்றும் மாற்றுத் திறனாளிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Next Story