புனேயில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 11 பள்ளி மாணவர்கள் காயம்


படம்
x
படம்
தினத்தந்தி 11 April 2022 5:50 PM IST (Updated: 11 April 2022 5:50 PM IST)
t-max-icont-min-icon

புனேயில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 11 பள்ளி மாணவர்கள், டிரைவர் காயமடைந்தனர்.

புனே, 
புனேயில் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 11 பள்ளி மாணவர்கள், டிரைவர் காயமடைந்தனர்.
லாரி மோதியது
புனே, உராலி காஞ்சன் பகுதியில் காலை 7.30 மணியளவில் பள்ளி மாணவர்களுடன் ஆட்டோ ஒன்று சென்று கொண்டு இருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த வழியாக திராட்சை பழம் ஏற்றி வந்த லாரி, ஆட்டோவின் பின்னால் மோதியது. இதில் ஆட்டோவின் பின் பகுதி சேதமானது. மேலும் ஆட்டோவில் இருந்த மாணவர்கள், டிரைவர் காயமடைந்தனர்.
தகவல் அறிந்து சென்ற போலீசார் விபத்தில் படுகாயமடைந்த ஆட்டோ டிரைவர் மற்றும் சில மாணவர்களை மட்டும் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
11 பேர் காயம்
விபத்து குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஆட்டோவில் சுமார் 12 மாணவர்கள் இருந்து உள்ளனர். அனைவரும் 10 முதல் 15 வயது வரை உள்ளவர்கள். அருகில் உள்ள மகாத்மா காந்தி பள்ளியில் படிக்கின்றனர். லாரி மோதியதில் டிரைவர் மற்றும் 10 மாணவர்கள் காயமடைந்தனர். இதில் 7 பேர் மாணவிகள். எனினும் டிரைவர் உள்ளிட்ட சிலருக்கு மட்டும் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. அவர்கள் மட்டும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்" என்றார். 
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த யவத் போலீசார் தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். பள்ளி மாணவர்கள் சென்ற ஆட்டோவில் லாரி மோதிய விபத்தால் நேற்று புனேயில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story