மராட்டிய அரசை சீர்குலைக்கும் முயற்சியை தேசியவாத காங்கிரஸ் முறியடிக்கும்- சரத்பவார்
மகா விகாஸ் அகாடி அரசை சீர்குலைக்க பா.ஜனதா நடத்தும் முயற்சியை தேசியவாத காங்கிரஸ் சீர்குலைக்கும் என்று சரத்பவார் பேசினார்.
மும்பை,
மகா விகாஸ் அகாடி அரசை சீர்குலைக்க பா.ஜனதா நடத்தும் முயற்சியை தேசியவாத காங்கிரஸ் சீர்குலைக்கும் என்று சரத்பவார் பேசினார்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நேற்று அமராவதியில் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-
சீர்குலைக்க முயற்சி
மத்திய அமைப்புகளை தவறாக பயன்படுத்துவதன் மூலமும், மாநிலங்களுக்கு இடையே சர்ச்சைகளை உருவாக்குவதன் மூலமும், தலைவர்களுக்கு எதிரான விசாரணையை நடத்துவது மூலமும், ஆட்சியில் இல்லாத மாநிலங்களை சீர்குலைக்க பா.ஜனதா முயற்சிக்கிறது.
மத்திய அரசின் இந்த முயற்சியை தேசியவாத காங்கிரஸ் முறியடித்து, அதற்கு எதிராக முழு பலத்துடன் போராடும். எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை மத்திய அரசு வேண்டுமென்றே புறக்கணிக்கிறது.
மக்களிடையே வேலையில்லா திண்டாட்டத்தை அதிகரித்து, அவர்களின் கவனத்தை வேறு பிரச்சினைகளில் திசை திருப்புகிறார்கள்.
அமைதியின்மையை உருவாக்க
காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் குறித்து கருத்து தெரிவித்த தலைவர், இந்துக்களிடையே அமைதியின்மையை உருவாக்கவும், நாட்டில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கவும் திரைப்படத்தை மக்களுக்கு காண்பிப்பதில் மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது.
மத அடிப்படையில் சமூகத்தில் பிளவை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
---------
Related Tags :
Next Story