திருச்செந்தூரில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்


திருச்செந்தூரில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்
x
தினத்தந்தி 11 April 2022 8:26 PM IST (Updated: 11 April 2022 8:26 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் ஆவுடையார்குளம் மறுகால் ஓடையின் கரையில் இருந்த ஆக்கிரமித்து கட்டிடங்களை நேற்று வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடியாக பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர்.

திருச்செந்தூர்:
திருச்செந்தூர் ஆவுடையார்குளம் மறுகால் ஓடையின் கரையில் இருந்த ஆக்கிரமித்து கட்டிடங்களை நேற்று வருவாய்த்துறை அதிகாரிகள் அதிரடியாக பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர்.
ஓடை ஆக்கிரமிப்புகள்
திருச்செந்தூர் ஆவுடையார்குளத்தின் மறுகால் ஓடை தோப்பூர் பகுதியில் தொடங்கி நகர் பகுதி வழியாக ஜீவா நகர் பகுதியில் கடலில் கலக்கிறது. இந்த மறுகால் ஓடையில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்றக்கோரி நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதன் பேரில் ஆக்ரமிப்புகளை அகற்றிடுமாறு பொதுப்பணித்துறையினருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 
இதனையடுத்து டி.பி.ரோட்டில் உள்ள சரவணப்பொய்கை தெரு மற்றும் சலவையாளர் தெரு ஆகிய பகுதிகளில் மறுகால் ஓடையின் கரையில் உள்ள குடியிருப்புகள், வணிக கடைகள் உள்ளிட்ட 23 ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிக்காக கடந்த கடந்த 8-ந் தேதி வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்தனர். 
காலஅவகாசம்
அப்போது அங்குள்ள குடியிருப்பை சேர்ந்தவர்கள் தங்களுக்கு கால அவகாசம் கேட்டதுடன், நீர்நிலைகளை ஒட்டியுள்ள ஆக்ரமிப்புகளை தாங்களாகவே அகற்றிடுவதாக அதிகாரிகளிடம் தெரிவித்தனர். 
இதையடுத்து முதற்கட்டமாக வருவாய்த்துறையினர் முன்னிலையில் நில அளவையர்கள் மறுகால் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்பு இடங்களை அளவீடு செய்து கொடுத்தனர்.
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ஆனால் பொதுமக்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றாததால்,  திருச்செந்தூர் தாசில்தார் சுவாமிநாதன் தலைமையில் நேற்று வருவாய்த்துறை அலுவலர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களில் இருந்த கட்டிடங்களை இடித்து அகற்றினர். 
மேலும் இப்பகுதியின் கிழக்கு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் விரைவில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story