பெரியபாளையம் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி
பெரியபாளையம் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி பரிதாபாக பலியானார்.
தொழிலாளி
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு கிராமம் அய்யனார்மேடு காலனியில் வசித்து வருபவர் குமார். இவருடைய மருமகன் ஸ்டாலின் (வயது 36). இவர் தனது மனைவி பிரியங்கா மற்றும் 2 பிள்ளைகளுடன் சென்னை திருவொற்றியூரில் வசித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று ஸ்டாலின் சிறுவாபுரியில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு வந்திருந்தார். பின்னர், சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்றார். அப்போது கோவில் குளத்தில் கை, கால் கழுவ முயன்றுள்ளார். இதில் நிலைதடுமாறிய ஸ்டாலின் குளத்தில் தவறி விழுந்துள்ளார்.
பலி
உடனே அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து குளத்தில் இறங்கி அவரை காப்பாற்ற முயன்றுள்ளனர். அதற்குள், அவர் நீரில் மூழ்கி மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவலறிந்த ஆரணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பலியான ஸ்டாலின் உடலை கைப்பற்றி பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story