முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குரல் கொடுத்து வருகிறார்
தமிழக மக்களின் உரிமைகளை காக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குரல் கொடுத்து வருகிறார் என நாகையில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
வெளிப்பாளையம்:
தமிழக மக்களின் உரிமைகளை காக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குரல் கொடுத்து வருகிறார் என நாகையில், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
பேட்டி
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நாகையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் இந்தி பேசும் மாநிலங்கள்தான் தேவை. மோடியை எதிர்க்கும் மிகப்பெரிய சக்தியாகவும், தமிழக மக்களின் உரிமைகளை காக்கவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குரல் கொடுத்து வருகிறார். வரி உயர்வு குறித்து தமிழக அரசு சட்டப்பேரவையில் தெளிவாக விளக்கி இருக்கிறது. புதுச்சேரி மற்றும் சென்னை கவர்னர்களின் செயல்பாடுகள் மோசமாக உள்ளது.
தி.மு.க.விற்கு எதிராக பேசி வருகிறார்
அரசியல் சாசனத்தின்படி நடக்காமல், தான்தோன்றி தனமாக தமிழக கவர்னர் செயல்பட்டு வருகிறார். தமிழிசை சவுந்தரராஜன், எல்.முருகனுக்கு பதவி கிடைத்ததுபோல தனக்கும் கிடைக்கும் என எண்ணி பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தினமும் தி.மு.க.விற்கு எதிராக பேசி வருகிறார்.
தமிழகத்தில் தி.மு.க அ.தி.மு.க.விற்கு அடுத்து காங்கிரஸ்தான், தமிழகத்தை பொறுத்தவரை பா.ஜ.க. அகில இந்திய கட்சி அல்ல, மாவட்ட கட்சி தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாநில செயலாளர் நவ்ஷாத், மாவட்ட தலைவர் அமிர்தராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.
----
Related Tags :
Next Story