விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை


விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
x
தினத்தந்தி 11 April 2022 9:36 PM IST (Updated: 11 April 2022 9:36 PM IST)
t-max-icont-min-icon

நாகூர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

நாகூர்:
நாகூர் அருகே நரிமணம் சுல்லாங்கால் பகுதியை சேர்ந்த சந்தானம் மகன் மணிவேல் (வயது 35).கூலி தொழிலாளி. இவர் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு வயிற்றுவலி அதிகமானதால் மனமுடைந்த மணிவேல் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) எடுத்து குடித்துள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிவேல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story