பக்தர்கள் பால்குட ஊர்வலம்


பக்தர்கள் பால்குட ஊர்வலம்
x
தினத்தந்தி 11 April 2022 10:09 PM IST (Updated: 11 April 2022 10:09 PM IST)
t-max-icont-min-icon

நாகை கீச்சாங்குப்பம் மகா காளியம்மன் கோவிலிலுக்கு பக்தர்கள் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

வெளிப்பாளையம்:
நாகையை அடுத்த கீச்சாங்குப்பம் மீனவர் கிராமத்தில் உள்ள மகா காளியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா கடந்த 5-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பால்குட ஊர்வலம் நேற்று நடைபெற்றது.முன்னதாக சேவாபாரதி விநாயகர் கோவிலில் இருந்து திரளான பக்தர்கள் பால்குடம், முளைப்பாரி எடுத்து கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக சென்று கோவிலை  அடைந்தனர். பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story