மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பலி


மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் பலி
x

புதுக்கடை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

புதுக்கடை:
புதுக்கடை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த விபத்து குறித்த விவரம் வருமாறு:-
கல்லூரி மாணவர்
புதுக்கடை அருகே உள்ள அம்சி பகுதியை சேர்ந்தவர் எட்வின். இவரது மகன் எட்வர்ட் ஜிஜோ (வயது21). நாகர்கோவிலில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். நேற்று முன்தினம் எட்வர்ட் ஜிஜோ, அவரது நண்பர் சுபின் ஆகிேயார் மோட்டார் சைக்கிளில் வெள்ளையம்பலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை சுபின் ஓட்டி செல்ல எட்வர்ட் ஜிஜோ பின்னால் அமந்திருந்தார். 
வெள்ளையம்பலம் பகுதியில் சென்ற போது மேலமங்கலம் பகுதியை சேர்ந்த சுவாமிதாஸ் என்பவர் சாலைைய கடக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக சுவாமிதாஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
பரிதாப சாவு
இதில் சுவாமிதாசும், மோட்டார் சைக்கிளில் வந்த 2 நண்பர்களும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். விபத்து நடந்ததும் அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் அங்கு கூடினர். அவர்கள் படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். எட்வர்ட் ஜிஜோ ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியிலும், சுபின் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியிலும், சுவாமிதாஸ் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டனர். 
இந்த நிலையில் மாணவர் எட்வர்ட் ஜிஜோ சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story