சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் ரசாயன கழிவு மூட்டையால் சுகாதார சீர்கேடு


சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் ரசாயன கழிவு மூட்டையால் சுகாதார சீர்கேடு
x
தினத்தந்தி 11 April 2022 10:46 PM IST (Updated: 11 April 2022 10:46 PM IST)
t-max-icont-min-icon

சாலையோரத்தில் குவிந்து கிடக்கும் ரசாயன கழிவு மூட்டையால் சுகாதார சீர்கேடு

முத்தூர்:
நத்தக்காடையூர் அருகே சாலையோரத்தில் குவிந்துகிடக்கும் ரசாயன கழிவு மூட்டைகள் காரணமா சுகாதாரசீர்்கேடு ஏற்படுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
ரசாயனகழிவு முட்டைகள்
திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர்-கண்ணபுரம் பிரதான சாலை செலாம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று காலை அதிக அளவு ரசாயன கழிவுகள் சிறு, சிறு மூட்டைகளாக கட்டப்பட்டு சாலையோரத்தில் கொட்டப்பட்டு இருந்தன. இதுபற்றி அவ்வழியே சென்ற கனரக, இருசக்கர வாகன ஓட்டிகள், அப்பகுதியை சேர்ந்த கிராம பொதுமக்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலையோரத்தில் கொட்டப்பட்டு இருந்த ரசாயன கழிவு மூட்டைகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுபற்றி அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறியதாவது:-
தொற்று நோய் அபாயம்
செலாம்பாளையம் கிராம பஸ் நிறுத்தம் அருகில் சாலையோரத்தில் கொட்டப்பட்டு உள்ள இந்த ரசாயனகழிவு மூட்டைகளை மர்ம நபர்கள் யாரோ நள்ளிரவு நேரத்தில் கனரக வாகனத்தில் கொண்டு வந்து ஒரே இடத்தில் கொட்டிவிட்டு சென்று விட்டனர். இந்த மூட்டைகளில் உள்ள ரசாயனகழிவுகள் இளமஞ்சள் நிறத்தில் சிறு துகள்களான நிலையில் உள்ளது. இந்த ரசாயனகழிவுகளால் இந்த இடத்தை கடந்து செல்லும் இருசக்கர, கனரக வாகன ஓட்டிகள் இப்பகுதிகளை சேர்ந்த கிராம பொதுமக்கள், விவசாயிகள் ஒரு வித அச்சம் அடைந்துள்ளனர். 
மேலும் இந்த ரசாயன கழிவு மூட்டைகளில் உள்ள சிறு துகள்கள் காற்றில் பறந்து இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளின் மீது விழும்போது உடல் அரிப்பு, தோல் நோய், அலர்ஜி உள்பட பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய அபாயம் உள்ளது. மேலும் ஒரு வித துர்நாற்றம் வீசுவதால் சுகாதாரசீர்கேடு ஏற்படுவதுடன் இப்பகுதியைச் சேர்ந்த கிராம பொதுமக்கள் தொற்று நோய் பாதிப்பால் மிகுந்த சிரமம் அடைய வாய்ப்பு உள்ளது.
அபாயம்
இப்பகுதிகளில் மழை பெய்யக்கூடிய நிலையில் சாலையோரத்தில் கிடக்கும் ரசாயன கழிவுகள் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மீது பட்டு ஆபத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சாலையோரத்தில் கிடக்கும் ரசாயன கழிவு மூட்டைகளை அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
மேலும் இதுபோன்று சாலையோரத்தில் ரசாயன கழிவுகளை மூட்டைகளாக கட்டி கொட்டி விட்டு செல்லும் மர்ம நபர்கள் மீது போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், இரவு நேரங்களில் போலீசார் தீவிர ரோந்து சுற்றி கண்காணிக்க ேவண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story