விழுப்புரத்தில் பள்ளி மாணவி தற்கொலை


விழுப்புரத்தில் பள்ளி மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 11 April 2022 10:53 PM IST (Updated: 11 April 2022 10:53 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டார்.


விழுப்புரம், 

விழுப்புரம் இந்திரா வீதியை சேர்ந்தவர் மாறன் மகள் துர்காதேவி (வயது 16). இவர் விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டில் மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து மாறன், விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரில், தனது மகள் வயிற்றுவலி தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டதாக கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதனிடையே மாணவி குறும்படம் ஒன்றில் நடித்ததாகவும் அந்த படம் வெளியான அதே நாளில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் குறும்படத்தில் நடித்ததற்கும், தற்கொலைக்கும் தொடர்பு உள்ளதாக சமூகவலைதளங்களில் தகவல் வைரலாகியது.  

ஆனால் மாணவியின் தற்கொலைக்கு வேறு எந்த காரணமும் இல்லை என்று அவரது பெற்றோர்கள், உறவினர்கள் போலீசாரிடம் கூறியுள்ளனர். இருப்பினும் மாணவியின் சாவு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story