நண்பரின் மனைவி குளித்ததை வீடியோ எடுத்து மிரட்டி வாலிபர் உல்லாசம்
கடலூரில் நண்பரின் மனைவி குளித்ததை வீடியோ எடுத்து மிரட்டி அவருடன் வாலிபர் உல்லாசம் அனுபவித்துள்ளார்.
கடலூர் முதுநகர்,
கடலூர் முதுநகர் அருகே உள்ள செம்மங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் 29 வயது வாலிபர். இவருக்கு தென்காசியை சேர்ந்த 25 வயதுடைய இளம்பெண்ணுடன் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
அந்த வாலிபரும், அதே பகுதியை சேர்ந்த சசிக்குமார் என்பவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். லாரி டிரைவரான அந்த வாலிபர், அடிக்கடி வெளியூர்களுக்கு சென்றுவிட்டு ஒரு மாதங்களுக்கு பிறகு வீட்டுக்கு திரும்பி வருவதுண்டு.
குளிக்கும் வீடியோ
அந்த சமயங்களில் சசிக்குமார், தனது நண்பரின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது நண்பரின் மனைவி குளித்ததை, அவருக்கு தெரியாமல் சசிக்குமார் தனது செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த வீடியோவை அவரிடம் காண்பித்து, தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என்றும், இல்லையெனில் வீடியோவை சமூக வலைத்தளங்களில் நண்பர்களுக்கு அனுப்பி விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்து போன அந்த பெண், சசிக்குமாரின் ஆசைக்கு இணங்கியதாக கூறப்படுகிறது. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அவர், அந்த பெண்ணை மிரட்டி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இந்த விவகாரம் பற்றி அறிந்த அந்த பெண்ணின் கணவர், சசிக்குமாரை கண்டித்துள்ளார்.
ஆசைக்கு இணங்க மிரட்டல்
மேலும் அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தென்காசியில் உள்ள மாமனார் வீட்டுக்கு சென்று வசித்து வந்துள்ளார். இதற்கிடையே நண்பரின் மனைவியின் செல்போன் எண்ணை தெரிந்துகொண்ட சசிக்குமார் அவரை மீண்டும் தொடர்பு கொண்டு தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என மிரட்டி உள்ளார்.
இதுபற்றி அந்த பெண்ணின் தந்தை, கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார், சசிக்குமார் மற்றும் அவரது தந்தை இருவரையும் அழைத்து விசாரணை நடத்தி எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
பரபரப்பு
இந்த நிலையில் சசிக்குமார், தனது நண்பனின் மனைவி மற்றும் அவரது தந்தை, சகோதரிகளின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதாக தெரிகிறது. இதுகுறித்து பெண்ணின் கணவர், கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் மீண்டும் புகார் கொடுத்தார். அதன் பேரில் சசிக்குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே சசிக்குமார் கஞ்சா வழக்கில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நெல்லிக்குப்பம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நண்பனின் மனைவியை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி உல்லாசம் அனுபவித்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story