சசிகலா நீக்கியது செல்லும் என கோர்ட்டு தீர்ப்பு தர்மபுரியில் அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்


சசிகலா நீக்கியது செல்லும் என கோர்ட்டு தீர்ப்பு தர்மபுரியில் அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
x
தினத்தந்தி 11 April 2022 11:22 PM IST (Updated: 11 April 2022 11:22 PM IST)
t-max-icont-min-icon

சசிகலா நீக்கியது செல்லும் என கோர்ட்டு தீர்ப்பை வரவேற்று தர்மபுரியில் அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தர்மபுரி:
சசிகலாவை கட்சியை விட்டு நீக்கிய அ.தி.மு.க. பொது குழு தீர்மானம் செல்லும் என சென்னை கோர்ட்டு அறிவித்தது. இதனை வரவேற்று தர்மபுரி மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலகம் முன்பு நகர அ.தி.மு.க. சார்பில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். 
இந்த நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் நீலாபுரம் செல்வம், நகராட்சி கவுன்சிலர்கள் தனலஷ்மி சுரேஷ், ராஜாத்தி ரவி, அம்பிகா மாதையன், சத்யா கார்த்திக், செல்வி திருப்பதி, உமயாம்பிகை நாகேந்திரன், அலமேலு சக்திவேல், பழனியம்மாள் ராஜா, நாகராஜன், தண்டபாணி, செந்தில்வேலன், முன்னா, மாதேஷ், நகர துணை செயலாளர் அறிவாளி, நிர்வாகிகள் அம்மா வடிவேல், ஜெகன், விஜயகுமார், சுரேஷ், ஜம்புலிங்கம், கூட்டுறவு சங்க தலைவர்கள் அங்குராஜ், ராமசாமி உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story