தேன்கனிக்கோட்டையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 22 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல்-2 பேர் கைது
தேன்கனிக்கோட்டையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 22 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தேன்கனிக்கோட்டை:
ஓசூர் மதுவிலக்கு போலீசார் தேன்கனிக்கோட்டை தாலுகா கண்டகானப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது சின்ன மலசோனை சாலையில் உள்ள ஒரு வீட்டில் சோதனை செய்தனர். அங்கு கர்நாடக மதுபானங்களை கடத்தி வந்து பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக கண்டகாணபள்ளியை சேர்ந்த சங்கர் (வயது 50), ஒசட்டியை சேர்ந்த ராஜண்ணா (62) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள 22 ஆயிரம் கர்நாடக மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story