மின்வாரிய அலுவலர்களிடம் இருந்து எனது இறப்பு சான்றிதழை பெற்று தர வேண்டும் உயிரோடிருக்கும் முதியவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு

மின்வாரிய அலுவலர்களிடம் இருந்து எனது இறப்பு சான்றிதழை பெற்று தர வேண்டும் உயிரோடிருக்கும் முதியவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு
x
தினத்தந்தி 11 April 2022 11:26 PM IST (Updated: 11 April 2022 11:26 PM IST)
t-max-icont-min-icon

மின்வாரிய அலுவலர்களிடம் இருந்து எனது இறப்பு சான்றிதழை பெற்று தர வேண்டும் உயிரோடிருக்கும் முதியவர் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு

நாமக்கல்:
ராசிபுரம் தாலுகா செம்மாண்டப்பட்டி அருகே உள்ள கானாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்லப்ப கவுண்டர் (வயது 85). இவர் நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசனிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது பெயரில் உள்ள மின் இணைப்பு குறித்து எனது மகன் முருகேசன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மின்வாரிய அலுவலகத்தில் விவரம் கேட்டான். அதற்கு அதிகாரிகள் தரப்பில், ஆவணங்களை ஆய்வு செய்ததில் நான் இறந்து விட்டதாகவும், அதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாகவும் கூறப்பட்டது.
எனவே அவர்களிடம் இருந்து எனது இறப்பு சான்றிதழை எனக்கு பெற்று தர வேண்டும். உயிரோடு இருக்கும் நான் இறந்து விட்டதாக கூறிய மின்வாரிய அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

Next Story