பேளுக்குறிச்சி பகுதியில் சொந்த வாகனத்தை வாடகைக்கு இயக்குபவர்கள் மீது நடவடிக்கை குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு

பேளுக்குறிச்சி பகுதியில் சொந்த வாகனத்தை வாடகைக்கு இயக்குபவர்கள் மீது நடவடிக்கை குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு
x
தினத்தந்தி 11 April 2022 11:26 PM IST (Updated: 11 April 2022 11:26 PM IST)
t-max-icont-min-icon

பேளுக்குறிச்சி பகுதியில் சொந்த வாகனத்தை வாடகைக்கு இயக்குபவர்கள் மீது நடவடிக்கை குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி வாடை கார், ஆட்டோ டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசனிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
எங்கள் சங்கத்தின் மூலம் மொத்தம் 23 வாகனங்களை வாடகை வாகனமாக ஓட்டி வருகிறோம். எங்கள் சங்கத்திற்கும், வாகன உரிமையாளருக்கும் எதிராக சொந்த வாகனம் (ஓன் போர்டு) வைத்திருப்பவர்கள் வாடகைக்கு வாகனத்தை இயக்கி வருகிறார்கள். இதனால் எங்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கிறது. எனவே தாங்கள் சொந்த பயன்பாட்டிற்கான வாகனத்தை வாடகைக்கு விடும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறி இருந்தனர்.

Next Story