சாலை விபத்தில் தொழிலாளி சாவு
சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்.
உடையார்பாளையம்
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையத்தை அடுத்த அணிக்குறிச்சி மேலத்தெருவைச் சேர்ந்தவர் ராஜாங்கம் மகன் நீலமேகம் (வயது 31). இவரது மனைவி கீதா(27). இவர்களுக்கு ஹரீஸ்(4) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் கூலிவேலை பார்த்து வந்த நீலமேகம் சொந்த ஊருக்கு வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் நீலமேகம் சித்தப்பா வெங்கடாசலம் என்பவருக்கு கடலை அரைக்க உதவியாக வெண்மான்கொண்டான் சென்றுள்ளார். அப்போது கடலை அரைத்து விட்டு வெங்கடாசலம் சரக்கு ஆட்டோவில் சென்று விட்டார். நீலமேகம் அவரது மோட்டார் சைக்கிளில் அணிக்குறிச்சிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வெண்மான்கொண்டான் பெரிய ஓடை பாலத்தில் உள்ள தடுப்பில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் நீலமேகம் கீழே விழுந்ததில் தலையில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story