பாலாற்றின் கரையை ஆக்கிரமித்து பயிர் சாகுபடி செய்த 2 ஏக்கர் நிலம் மீட்பு


பாலாற்றின் கரையை ஆக்கிரமித்து பயிர் சாகுபடி செய்த 2 ஏக்கர் நிலம் மீட்பு
x
தினத்தந்தி 11 April 2022 11:40 PM IST (Updated: 11 April 2022 11:40 PM IST)
t-max-icont-min-icon

பாலாற்றின் கரையை ஆக்கிரமித்து பயிர் சாகுபடி செய்த 2 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது.

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா அம்பலூர் உள் வட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளான புல்லூர் பகுதியில் பாலாற்றின் கரையோர பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த நிலங்களை அகற்றும் பணியில் தாசில்தார் சம்பத் தலைமையில், வருவாய் ஆய்வாளர் சித்ரா, கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் ஈடுபட்டனர்.

அதன்படி புல்லூர் பகுதியில் பாலாற்றின் கரைைய ஆக்கிரமித்து பயிர் சாகுபடி செய்திருந்த வாழை, சோளம் உள்ளிட்ட பயிர்களை அழித்து 2 ஏக்கர் நிலத்தை நேற்று பொக்லைன் எந்திரத்தின் உதவியோடு அதிகாரிகள் மீட்டனர்.

Next Story