அரசு மாணவிகள் விடுதியில் அதிகாரி ஆய்வு


அரசு மாணவிகள் விடுதியில் அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 12 April 2022 9:39 PM IST (Updated: 12 April 2022 9:39 PM IST)
t-max-icont-min-icon

சங்கராபுரம் அரசு மாணவிகள் விடுதியில் அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.

சங்கராபுரம், 

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவின்பேரில் சங்கராபுரம் அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மாணவிகள் விடுதி மற்றும் எஸ்.வி.பாளையம் மாணவர்கள் விடுதியில்  மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விடுதியில் மாணவர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்டஅடிப்படை வசதிகள் முறையாக செய்து கொடுக்கப்பட்டுள்ளதா என்று பார்வையிட்டார். தொடர்ந்து மேலும் தரமான உணவு வழங்கப்படுகிறதா என்றும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த அதிகாரிகளிடம், மாணவர்களுக்கு சுகாதாரமான முறையில் உணவு வழங்க வேண்டும். இதில் தவறு ஏதும் நடைபெறாமல் கவனமுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அப்போது தாசில்தார் பாண்டியன், மண்டல துணை தாசில்தார் மாரியாப்பிள்ளை, தலைமையிடத்து துணை தாசில்தார் பாண்டியன், வருவாய் ஆய்வாளர் திருமலை, கிராம நிர்வாக அலுவலர்கள் வரதராஜன், சண்முகபிரியா ஆகியோர் உடன் இருந்தனர்.
1 More update

Next Story