ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 April 2022 9:51 PM IST (Updated: 19 April 2022 9:51 PM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் மற்றும் புவனகிரியில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம், 

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு வட்ட தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் முத்துக்குமரன், வட்ட நிர்வாகிகள் பழனிசாமி, அழகிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் மகாலிங்கம், அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் தமிழ்செல்வன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். முடிவில் துணைத்தலைவர் கலியமூர்த்தி நன்றி தெரிவித்தார். 

புவனகிாி

அதேபோல் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வட்டார தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. அண்ணாதுரை முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் சிவப்பிரகாசம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். வீர நாராயணன் கண்டன கோஷம் எழுப்பினார். 
இதில் அனைத்து அரசு ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முடிவில் முத்தமிழ் செல்வி நன்றி கூறினார்.
1 More update

Next Story