ரேஷன் அரிசி கடத்திய 7 பேர் கைது
ரேஷன் அரிசி கடத்திய 7 பேரை கைது செய்து, அரிசியையும் பறிமுதல் செய்தனர்
தென்காசி:
நெல்லை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணபோஸ், மகேஸ்வரன் ஆகியோர் தலைமையில் போலீசார் நேற்று பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே லோடு ஆட்டோவில் 1,050 கிலோ ரேஷன் அரிசி கடத்தியதாக அம்பை அருகே உள்ள பள்ளக்கால் புதுக்குடியை சேர்ந்த பச்சாத்தி (வயது 23), இசக்கிமுத்து (29) ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து அரிசியுடன் லோடு ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் சங்கரன்கோவில் பகுதியில் மோட்டார் சைக்கிள்களில் ரேஷன் அரிசி கடத்தியவர்களையும் கைது செய்தனர். 120 கிலோ ரேஷன் அரிசி கடத்தியதாக சங்கரன்கோவில் தெற்குபுதூரை சேர்ந்த மாரியப்பன், 100 கிலோ ரேஷன் அரிசி கடத்தியதாக சங்கரன்கோவில் பெரும்பத்துரை சேர்ந்த கருப்பசாமி, 120 கிலோ ரேஷன் அரிசி கடத்தியதாக கீழநீலிதநல்லூரை சேர்ந்த குமார், 100 கிலோ அரிசி கடத்தியதாக வடக்கு புதூரை சேர்ந்த முப்பிலி ஆகியோரை கைது செய்து ரேஷன் அரிசியையும், மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.
சங்கரன்கோவில் தளவாய்புரம் பகுதியில் 120 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த தளவாய்புரத்தைச் சேர்ந்த கடற்கரையாண்டி என்பவரை கைது செய்து, அரிசியையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story