சென்னை விமான நிலையத்தில் மண் காப்போம் விழிப்புணர்வு நடனம்


சென்னை விமான நிலையத்தில் மண் காப்போம் விழிப்புணர்வு நடனம்
x
தினத்தந்தி 23 April 2022 2:44 PM IST (Updated: 23 April 2022 2:44 PM IST)
t-max-icont-min-icon

சென்னை விமான நிலையத்தில் மண் காப்போம் விழிப்புணர்வு நடனம் நடைபெற்றது.

ஆலந்தூர்,

உலக பூமி தினத்தை முன்னிட்டு ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு தொடங்கியுள்ள ‘மண் காப்போம் இயக்கம்’ சார்பாக ‘மண்ணோடு தொடர்பில் இருங்கள்’ என்ற பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சினிமா நடன இயக்குனர் கலா, ‘பிக்பாஸ்’ பாலாஜி முருகதாஸ் உள்பட 300-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு மண்ணை காப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது அனைவரும் மண்னை காப்போம் என்று விழிப்புணர்வு நடனம் ஆடினார்கள்.

இது பற்றி நடன இயக்குனர் கலா கூறும்போது, “பருவ நிலை மாற்றம் உள்பட பல விஷயங்களை பற்றி பேசுகிறோம். ஆனால் மண் குறித்து பேசுவதில்லை. மண் கோடான கோடி உயிர் ஜீவன்களை வாழ வைத்துகொண்டு இருக்கிறது. மண் ஊட்ட சக்தியை குறைத்து வருகிறோம். மண் நல்லா இருந்தால்தான் விவசாயம் நன்றாக இருக்கும். மண்ணில் ரசாயனத்தை போடுவதால் மண் கெட்டு விடுகிறது. 20-ம் நூற்றாண்டின் முதற்பகுதியில் இருந்து 19 சதவீதம் மண் ஊட்டச்சத்து குறைந்து உள்ளது. மண் நல்லா இருந்தால்தான் மனிதன் ஆரோக்கியமாக இருக்க முடியும்” என்றார்.

Next Story