வாணியம்பாடி நூலகத்தில் உலக புத்தக தின விழா


வாணியம்பாடி நூலகத்தில் உலக புத்தக தின விழா
x
தினத்தந்தி 23 April 2022 5:09 PM IST (Updated: 23 April 2022 5:09 PM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி முழு நேர கிளை நூலகத்தில் உலக புத்தக தின விழா நடந்தது.

வாணியம்பாடி

வாணியம்பாடி முழு நேர கிளை நூலகத்தில் உலக புத்தக தின விழா நடந்தது. அதையொட்டி புத்தக கண்காட்சி நடந்தது. வாசகர் வட்ட தலைவர் ம.பார்த்தீபன், ஓய்வுெபற்ற சுகாதார ஆய்வாளர் கே.எம்.டி.சரவணன், தொழில் அதிபர் டி.எஸ்.சித்ரா சீனிவாசன், காசிநாதன், கார்த்திக் விஜயகுமார் மற்றும் வாசகர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மற்றும் காந்திநகர் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் 50 பேர் நூலகத்தில் உறுப்பினராக சேர்ந்தனர். காந்திநகர் தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கதை சொல்லுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. 

விழாவில் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் ரா.ரோஸ்லிடியா தனராணி மற்றும் தலைமை நூலகர் வ.மணிமாலா, நூலகர் சி.ராஜசேகர் பங்ேகற்றனர்.

Next Story