எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம்
திருவண்ணாமலையில் எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் படி இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் பெட்ரோல் பாதுகாப்பு ஆராய்ச்சி சங்கம் ஆகியவை இணைந்து எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
அதில் திருவண்ணாமலையில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை நகராட்சி ஈசான்ய மைதானம் முன்பிருந்து தொடங்கிய ஊர்வலத்தை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஈசான்ய மைதானத்தில் தொடங்கிய ஊர்வலம் மத்திய பஸ் நிலையம் வழியாக சென்று டவுன் ஹால் பள்ளியில் முடிந்தது.
அதில் மாணவர்கள் எரிபொருள் சிக்கனம் குறித்த பதாகைகளை ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஊர்வலத்தில் திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன், சப்- இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், இந்தியன் ஆயில் நிறுவன துணை மேலாளர் ராக்கிந்த் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட கியாஸ் விற்பனை வினியோகஸ்தர்கள், அலுவலக ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story